பூம்புகார் நகர், கொளத்தூர்
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதிபூம்புகார் நகர் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் கொளத்தூர் புறநகர்ப் பகுதிக்கு அருகில், 13°07′16.0″N 80°12′48.2″E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 33 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். கொளத்தூர், இலட்சுமிபுரம், பொன்னியம்மன்மேடு, பெரவள்ளூர், செம்பியம், திரு. வி. க. நகர், அகரம், ஜவஹர் நகர், பெரியார் நகர், வில்லிவாக்கம், ஜெனரல் குமாரமங்கலம் காலனி மற்றும் பெரம்பூர் ஆகியவை பூம்புகார் நகர் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய ஊர்களாகும். இப்பகுதியில் இரண்டு முக்கிய சாலைகள், 30 முக்கிய தெருக்கள் மற்றும் 28 குறுக்குத் தெருக்கள் உள்ளன. பூம்புகார் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர் தேங்குவதைத் தீர்க்க ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தால் பூம்புகார் நகர் பயனடைகிறது.



